காலங்கள் எத்தனை கடந்தாலும்,
உன் கை பிடித்து நான் நடந்த ஞாபகங்கள்,
மௌனமாய் உன் வருகைக்காக நான் காத்திருந்த நிமிடங்கள்,
என் கைபேசி அழைக்கும் ஒவ்வொரு பொழுதும்,
அது நீயாக இருக்க வேண்டும் என நான் நினைத்த தருணங்கள்....
உண் அருகே உட்கார்ந்து,
ரசித்த கடல் அலைகள்,
உன்னுடன் சேர்ந்து நனைந்த மழை,
நாம் சேர்ந்து சிரித்த சிரிப்புகள்.
உனக்கு தெரியாமல் உன் குரலை பதிவு செய்து,
நான் கேட்டு ரசித்த இரவுகள்...
எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளிகள்,,
எனக்கே சொந்தமான உண் காதல்,
உன்னை முதல் முதலாய் பார்த்த அந்த நொடி,
நீ கடைசியாக என்னுடன் பேசிய வார்த்தைகள்,
எல்லாம் என்னுடனே,
நான் வெட்ட வெளியில்,அலைந்தாலும்,
கல்லறையில் துயில் கொண்டாலும்,
என் தனிமைக்கு துணையாக......
super... its very nice...
ReplyDeletemacha...some of the lines apply for friendship also da.....when i started reading it...i thought its a poem for friendship but at the end i found its for love....any ways nice da....
ReplyDelete