ஆண்டவன் கட்டளை ....
விஜய் சேதுபதி, ரித்திகா சிங்க், நாசர் , யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் . இப்படத்தை "காக்கா முட்டை" படத்தை இயக்கியவர் இயக்கி இருக்கிறார். திரைக்கதை-ஐ இவருடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள் இசை இன்னொரு அறிவு ஜீவி , cinematography இன்னொரு அறிவு ஜீவி .
பாத்தீங்கன்னா மக்களே இந்த மாதிரி ஒரு படத்தை நீங்க bollywood , hollywood மற்றும் இல்லை சந்திரமண்டலத்தில் கூட பார்க்க முடியாது. படம் ஆரம்பிப்பதும் முடிவதும் audience-ற்கு தெரியாது as a matter of fact இந்த பிரச்சனை வர கூடாது என்று டைரக்டர் யோசித்தாரோ என்னவோ நமக்கு இந்த குழப்பம் வர கூடாது என்று படம் முடிந்த உடன் "சுபம்" என்று போட்டு நம்மளுக்கு "clue" குடுத்து இருக்கும் டைரக்டர்- இன் சாமர்த்தியத்திற்கு ஒரு சபாஷ். சரி கதை என்னவென்றால் விஜய் சேதுபதி வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார். ஆனால் வேலை இல்லாமல் இருக்கும் இவரை நம்பி இவரது மாமா நிறைய கடன் குடுத்து இருக்கிறார்,எதற்கு இந்த கடன் என்று "part-2" விடை கிடைக்கும் என நம்புகிறேன். வாங்கிய கடனை அடைக்க நினைக்கும்போது தனது U.K. return நண்பனை சந்திக்கிறார் நாயகன் வி.சே . U.K சென்றால் நிறைய பணம் சம்பாரிக்கலாம் என முடிவுக்கு வருகிறார் உடனே சென்னை செல்கிறார் ஆமாம் சென்னை சென்றால் தானே நாயகி-ஐ route விட முடியும்!! அங்கே போய் ஒரு fraud ஏஜென்ட் -இடம் உதவி கேட்கிறார். இப்பொழுது உங்களுக்கு "வெற்றிகொடிக்கட்டு " படம் ஞாபகம் வருகிறதா ? எனக்கும் வந்ததே ! அனால் அதுதான் இல்லை இவர் நிஜமாகவே U.K. செல்ல அந்த agent உதவிசெய்கிறார் . பாஸ்போர்ட்-இல் இவர் married என போட சொல்கிறார் அதற்கு எதோ காரணம் சொல்கிறார் அந்த நேரம் பார்த்து முன் சீட்டிற்கு ஆள் வந்து "settle" ஆகி கொண்டிருந்தார்கள் அதனால் நான் மிஸ் பண்ணிட்டேன் !!
இப்போ வி.சே உளுஉலாய் -க்கி ஒரு பெயர்-ஐ fill செய்கிறார். Correct!! அதுதான் heroine ரித்திகா சிங்க்-ன் பெயர் பிறகு interview கு செல்கிறார் ஆனால் சொதப்பி விடுகிறார் இனிமேல் என்ன செய்ய போகிறார் , heroine - ஐ எப்படி route விடுகிறார் இதுதான் கதை.இது போக படம் முடியும் பொழுது பெருசாக நமக்கு ஒரு message கூட சொல்கிறார் "டைரக்ட்டுடக்கர்".
படம் பிரமாதம், யோகி பாபு வின் நகைச்சுவை ஆஹா ஒஹோ என இணை தலத்தில் பரவலாக பேசி இருப்பதை பார்த்து நான் கொஞ்சம் "expectation"- ஓடு போனேன் அதிலும் ஒரு twistu படு மொக்கையான படம் மற்றும் காமெடிகள். எனக்கு என்னவோ படத்தின் பட்ஜெட் மிக கணிசமான அளவில் உள்ளதால் இந்த மாதிரி மார்க்கெட்டிங்-ற்கு காசை இறைத்திருப்பார்களோ என ஒரு doubt-u!
படத்தில் எல்லாருமே அறிவு ஜீவிகள் பணியாற்றி இருப்பதினால் என்னை போல் சாதாரண "மசாலா" பட ரசிகனுக்கு நிறைய புடிபடவில்லை அதில் சில
1.படத்தில் என்ன கதை ? எல்லாரும் வருகிறார்கள் போகிறார்கள் . கதை என்பது படத்தில் எங்கே ??? எனக்கு சத்தியமா புரியல படம் "கிளாஸ்" என சொல்லும் சில புண்ணியவான்கள் இந்த கதை என்ன என்று சொன்னால் புண்ணியமா போகும்.ஏனா வி.சே ஊரு விட்டு வருவதே கடனை அடைக்க காசு சம்பாரிக்கத்தான் அதை விட்டுபாஸ்போர்ட் பிரச்சனைக்காக மேலும் மேலும் இறங்கி வேலை செய்கிறார் கடைசில கடனை அடைச்சாரா இல்லை அது"part-2" வில் தான் காண்பிப்பார்களா ??!
2.ரித்திகா , heroine அதனால் அவரை ஹீரோ லவ்வனும். அவர்கள் இருவருக்கும் ஒரே டேஸ்ட் எல்லாமே ரைட்டு நாளும் ஒரு "proper love track" வேணாமா? பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கடைசியில் கல்யாணம் பணிக்கலாமா என வி.சே கேட்க என்னவோ காபி குடிக்க கூப்பிடுவது போல குலலி ஓகே சொல்லுகிறது இவ்ளோ யதார்த்தம் தேவையா??!!
3.யோகி பாபு கு U.K. வில் என்ன பிரச்னை நடந்தது ?? நம்ம பக்கத்துக்கு நாடு நாதாரிகளை பற்றி மட்டுமே பேசுகிறார், வெள்ளையனின் வன்கொடுமைகள் பற்றி ஏன் பேசவில்லை ?!! இதிலும் அரசியல்??
4.இசை திரு "கே" வித்யாசமான பாடல்கள் எவ்வளவு வித்யாசம் என்றால் எனக்கு டைட்டில் கார்டு-இல் இது 2016-ம் ஆண்டின் படமா இல்லை 1935-ன் படமா என சந்தேகமே வந்துவிட்டது !! புது பட பாடல்களை சுட்டால் கண்டு பிடுத்து விடுவோம் என்று பலைய படல்களாய்... ??!! ஹி ஹீ என்ன ?? எப்படியோ பாடல்கள் கண்ராவி ,தப்பு தப்பு பிரமாதம்!
5.அந்த சீலோன் தமிழர் தான் ஊமை என்று சொல்லி கொண்டு எல்லோருடனும் கதைக்கிறார் அப்பறோம் ஏ ன் அந்த build up. ஆனால் இது தவிர எனக்கு அந்த கதாபாத்திரதின் வழியே டைரக்டர் சமூகத்திற்கு சொல்லும் ஒரு செருப்படி மெசேஜ் பிடித்தது! அது தவிர வெள்ளையன் இருக்கும் வரை காந்தி உயிரோடுதான் இருந்தார் , போல் படமெங்கும் வாழைப்பழத்தில் ஊசி போல் உள்ள subtle messages மிக நன்று.
6. நம்ம பஞ்சாயத்துக்கு வருவோம்!! படத்தை இப்படியா எதார்தமாக எடுத்து செல்வது . எவ்ளோ எதார்த்தம் ஆனாலும் நாங்கள் திரையில் தானே காண்கிறோம்!! ஏன் இப்படி ஒரு படு மட்டமான திரைக்கதை ?? இல்ல இப்ப இந்த "திரைக்கதை " எனும் வார்த்தை உபயோகிக்க தயக்கமா இருக்கு ..இதை படிக்கும் ஒரு சிலர் இவனுக்கு என்ன தெரியும் என என்னை கழுவி ஊற்றிவிட்டு போகிறார்களோ என்று! இருந்தாலும் 2.15 மணி நேரம் உங்களை நம்பி வந்து உக்காரும் எங்களை இப்படியா "வச்சு செய்வீர்கள் "??
கடைசியாக இது மட்டும் ....நேற்று "டார்லிங் டர்லிங் டார்லிங் "என்னும் படத்தை பார்த்தேன் . 1982 வெளி வந்த படமாம்!! Channel மாற்றி கொண்டு இருக்கும்பொழுது ஒரு சீன் பார்க்க நேர்ந்தது அவ்ளோதான் அப்படியே முழு படத்தையும் பார்த்து விட்டேன் . இதற்கும் அந்த படம் பெரிய பட்ஜெட் கெடயாது , பஞ்ச் டயலாக் கெடயாது , நீங்கள் சொல்லும் அதே "யதார்த்தமான" கதை தான் . பாக்யராஜ் -ஆள் என்னை உக்கார வைக்க முடிந்த அளவுகூட உங்களால் எண்னை உக்கார வைக்க முடியவில்லை அது ஏன் டைரக்டர் அவர்களே ??